அகழாய்வுகள்

தொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆர்க்பபியாலஜி (தொல்லியல்) என்பது கிரேக்க சொல்லாகிய ஆர்காய்ஸ் மூலம் பெறப்பட்டது. ஆர்காய்ஸ் என்றால் பழமை என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் வழங்கப்படுகின்றது.

நம்முடைய முந்தைய சமுதாயங்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மூலம் பண்டைய வரலாற்றை மறுபதிவு செய்வதால் தொல்லியல் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய இரண்டுமே பண்டைய சமுதாயத்தை மனித ஆய்வு செய்கின்றன. கிடைக்கின்ற பழம்பொருட்களைக் கொண்டு மனிதனின் பண்பாட்டை ஆய்வு செய்து வரலாற்றுக்கு மற்றமொரு ஆய்வு நெறியினைத் தொல்லியல் தருகின்றது.