அழகன்குளம்

அழகன்குளம் கிராமம், கிழக்கு கடற்கரைப் பகுதியில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைகை ஆற்றங்கரையில் உள்ள இவ்வூர் கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 

அகழாய்வில் தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பானை ஓடுகளுடன் மத்திய தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ரௌலட்டட் மற்றும் ஆம்போரா பானை ஓடுகளும் கிடைக்கப் பெற்றன.

 

தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கி.பி. 100 காலத்தைச் சார்ந்ததாகும். மேலும், துளையுடன் கூடிய ஓடுகள், செங்கற்கள், மணிகள் மற்றும் மூன்று ரோமானியக் காசுகள் அகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

ரோமானியக் காசு ஒன்றில் முன்புறம் ரோமானியப் பேரரசரின் தலைப் பகுதியும்,பின்புறம் வெற்றி தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்ட்டுள்ளது. எழுத்தமைதியின் மூலம் பேரரசன் 2வது வேலன்டைன் (கி.பி. 375) காலத்தில் இக்காசு வெளியிட்டதாக அறியப்படுகிறது.