அழ்கடலாய்வு அகழ்வைப்பகம் - பூம்புகார்

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 A.M. to 05.00 P.M.

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

: Thiru P. Baskar, Epigraphist- I/C

தொலைபேசி

: ------------

 

தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையை ஒட்டித் துறைமுகங்கள் பல உள்ளன. இவற்றில் சோபட்டனம், காவிரிபூம்பட்டினம், தரங்கம்பாடி, காரைக்கால், பெரிய பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகியவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டு பயணக் குறிப்புகளிலும் காணப்படுகின்றன. பூம்புகார் (காவிரி பூம்பட்டினம்) கடலில் மூழ்கிவிட்டதாகக் கருதப்பட்டதால், அதனை அறியும் பொருட்டு 1981 –ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை முதற்கட்ட ஆய்வினை அங்கு மேற்கொண்டது.

ஆழ்கடலாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிக்கு வைப்பதற்கு, அங்கு ஆழ்கடலாய்வு அகழ்வைப்பகம் ஒன்று தொடங்கப்பட்டது. இவ்வகையான அகழ்வைப்பகம் இது ஒன்றே ஆகும்.

மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் சீர்காழி வட்டம், நாகப்பட்டின மாவட்டத்தில் 1997-ஆம் ஆண்டு இவ்வகழ்வைப்பகம், தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றது.

காட்சிப் பொருட்கள் :

இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடலாய்வு மற்றும் அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ரோமானிய நாட்டு (ரௌலெட்டடு) பளபளப்பூட்டிய பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன புத்தரின் தலைப்பகுதி, சுடுமண் புத்தபாதம், பெரிய அளவிலான செங்கற்கள், மணிகள், ரோமானிய சீனநாட்டுப் பானை ஓடுகள், அழகன்குளத்தில் கிடைத்த உருவங்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், அய்யனார் கற்சிற்பம் மற்றும் கப்பல்களின் மாதிரி வடிவங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.