இராஜராஜன் அகழ்வைப்பகம் - தஞ்சாவூர்

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m

விடுமுறை

: புதன்கிழமை

அதிகாரி

:Thiru T.Thangadurai, Curator- I/C

தொலைபேசி

: ------------

 

தென்னிந்தியாவை ஆண்ட மரபுகளில் குறிப்பிடத்தக்கது சோழமரபாகும். முதலாம் இராஜராஜன் (கி.பி. 975-1014) இம் மரபின் மிகச் சிறந்த அரசன் ஆவான். இவன் பெற்ற போர் வெற்றிகள், நிர்வாகத்திறன், பண்பாடு கலை மேம்பாடு போன்றவற்றிற்காப் போற்றப்படுகிறான். இவன் சோழப்பேரரசின் பலத்தை மிக உன்னத உயரத்திற்குக் கொண்டு சென்றதால் இப்பேரரசு, இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் சிறந்த பேரரசாகத் திகழ்ந்தது. இராஜராஜன் தனது தலைநகரான தஞ்சையில் மிகப் பெரிய கோயிலைக் கட்டியுள்ளான். இராஜராஜேஸ்வரம் (பெரிய கோயில்) எனப்படும் இக்கோயில் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட காலத்தால் மிகப் பெரிய கோயிலாகும்.

இக்கோயில் கட்டடக் கலைக்கும், சிற்பக்கலைக்கும் (கல் மற்றும் உலோகங்களுக்கும்) ஓவியங்கள் மற்றும் பாட்டு, நடனம் ஆகிய கலைகளுக்குச் சிறந்த இருப்பிடமாகத் திகழ்கின்றது. இம்மன்னனின் 1000-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வகழ்வைப்பகம் கி.பி. 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

யோக தட்சிணாமூர்த்தி, நடராஜர், ஜேஷ்டா, கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, முருகர், பைரவர், விநாயகர், சூரியன், ரிஷி அகஸ்தியர் மற்றும் நந்தி ஆகிய கற்சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இவ்வகழ்வைப்பகம் தஞ்சை, திருச்சி சாலையில் திருச்சியிலிருந்து 50 கி.மீ தொலைவில் இராஜராஜன் மணிமண்டபத்தில் அமைந்துள்ளது.