கங்கைகொண்டசோழபுரம்

கங்கைகொண்டசோழபுரம், பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழர்களின் இரண்டாம் தலைநகரமாக சுமார் 250 ஆண்டுகள் சிறப்புற்று விளங்கியது. இந்நகரம் இரண்டு மதிற்சுவர்களை அரணாகக் கொண்டு விளங்கியிருந்தது.

 

மாளிகைமேட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட மாளிகையின் மதிற்சுவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. செங்கற்களின் பருமன் 1.10 செ.மீ. ஆகும்.

 

அடித்தளத்தில் கருங்கற் தூண்கள் 2 மீ இடைவெளியில் நடப்பட்டிருந்தது. குவார்ட்ஸ் மணிகள் தந்தப் பொருட்கள், சங்கு வளையல்கள், கூரை ஓடுகள் மற்றும் சீனப் பானை ஓடுகள் அகழாய்வில் சேகரிக்கப்பட்டன.இச்சீனப் பானை ஓடுகள், கி.பி. 11-12 ஆம் நூற்றாண்டில் மாட்சிமை பெற்ற சோழப் பேரரசர்கள் சீன நாட்டுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பை எடுத்தியம்புகின்றன.