கங்கை கொண்ட சோழீஸவரர் கோயில் - கூழம்பந்தல்

வரலாற்றுச் செய்திகள்

கூழம்பந்தல் என்னும் இவ்வூர் கல்வெட்டுகளில் கங்கைகொண்ட சோழபுரம் என்றும் விக்ரமசோழபுரம் என்றும் குறிக்கப்படுகிறது. இவ்வூரில் தற்போது ஜகந்நாதீஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவன் கோயில் முன்னர் ‘கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார் கோயில்’ என வழங்கப்பட்டது. முதலாம் இராசேந்திரனின் குருவான ஈசான சிவபண்டிதர் இக்கோயிலை கற்றளியாகவே கட்டினார்.

இராஜேந்திரசோழனுடைய 22 - வது ஆடசியாண்டில் (கி.பி 1034) இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்ட இக்கற்றளி திரிதள விமானத்தைக் கொண்டுள்ளது. அர்த்த மண்டபமும், முகமண்டபமும் எழிலுடன் விளங்குகின்றனஇ முன்னர் திருச்சுற்று இருந்திருக்க வேண்டும். துற்போது அதன் எச்சமே ஆங்காங்கே தெறிகிறது.

 

முகமண்டபத்தையடுத்து உள்ள மகாமண்டபம் கூரையின்றித் தூண்களுடன் உள்ளது. இதன் கிழக்கிலும், தெற்கிலும் உள்ள வாயில்களில்ளூ அழகிய துவாரபாலகர்களும் உள்ளனர். கருவறை, உபபீடம் மற்றும் அதிஷ்டானத்துடன் விளங்குகிறது. சுவரில் ரூன்று திசைகளிலும் மும்ரூன்று கோட்டங்களில் கீழ்கண்ட சிற்பங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

தெற்கில் பிச்சாடனர், தடசிணாரூர்த்தி, ஹரிஹரன் ஆகிய சிற்பங்களும், மேற்கில் விஷ்ணு மற்றும் லிங்கோதபவரும், வடக்கில் சுப்பிரமணியர் மற்றும் பிரம்மா ஆகியோரும் சிற்பவடிவங்களாக உள்ளனர். அர்த்தமண்டபத்தின் தெற்கில் கணபதியும், வடக்கில் துர்க்கையும் காட்சி தருகின்றனர்

கங்கைகொண்ட சோழீஸ்வரமானது ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காலியு+ர் கோட்டத்து பாகூர் சாட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் இருப்பதாக கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. முதல் இராஜேந்திரன், முதல் இராஜாதிராஜன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையாருக்கு ஸ்ரீ ராஜாதிராஜதேவர் குருதேவர் ‘அதிகாரிகள் பராசரியன் வாசுதேவ நாராயணனான உலகளந்த சோழபிரம்மராயன்ளூ’, திருநந்தா விளக்கு ஒன்று அமைத்து அது எரிப்பதற்க நெய் வழங்குவதற்காக சாவாமுவாப் பேராடு, தொண்ணுரும் வழங்கியதை ஒரு கல்வெட்டு கூறுகிறது. சோழர் காலத்திய மஹாவீரர் கோயில், திருமால கோயில், கொற்றவை கோயில் ஆகியவையும் இங்கிருக்கின்றன.

அமைவிடம் : சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் வந்தவாசி செல்லும் வழியில் உள்ளது.

வட்டம் : செய்யாறு

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப.துறை/நாள்/12.02.93