கடம்பவணேஸ்வரர் கோயில் - எறும்பூர்

ஊரின் தென்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலுடன் கடம்பவணேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் எறும்பூர், உருரூர் என்றே வழங்கப்படுவதால் இவ்வூரே காலப்போக்கில் எறும்பூராகி இருக்கலாம். இச்சிவாலயம் சிறிய கருவறை, அர்த்தமண்டபத்துடன் கற்றளியாக விளங்குகிறது. கல்யாண சுந்தரி அம்மன் என்ற கோயிலும், சிவன் கோயில் முன்மண்டபமும் 13ஆம் நூற்றாண்டளவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது.

முதலாம் பராந்தகனின் 28 வது ஆட்சியாண்டில் (கி.பி 935) கோயில் அட்டபரிவாரங்களுடன் கற்றளியாகக்கட்டப்பட்டது. எனவே, முதலில் மண்டளியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும். வடகரை நல்வயலூர்க் கூற்றத்து தேவதானம் உறுமுறுச்சிறுத்திருக்கோயில் பெருமான் அடிகளுக்கு இளங்கோவன் குணவன் அபராஜிதன் என்பான் ஸ்ரீ விமானக் கற்றளி மற்றும் பரிவார ஆலயங்கள் எட்டினை எழுப்பியுள்ளான்.

யார் காலத்தில் எப்போது கோயில் கட்டப்பட்டது, என்ற விபரத்துடன் உள்ள கோயில் இதுவாகும். கருவறையைச் சுற்றியுள்ள மூன்று கோட்டங்களில் தட்சிணாரமூர்த்தி, சிவன், பிரம்மா ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர். தட்சிணாரமூர்த்தி சிற்பம் சையன நியையீல் ஞான தட்சிணாரமூர்த்தியாக உள்ளார். மேற் கோட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் என்றும் சிவயோகி என்றும் அழைக்கப்படும் சிவன் விமானத்தில் வீற்றிருக்கிறார். சடாமகுடம் புனைந்த நிலையில் சிற்பத்தின் பின் கைகள் மான், மழு ஏந்த, முன் கைகள் யோக நிலையில் உள்ளது. வடக்குக் கோட்டத்தில் நான்முகன் காட்சியளிக்கிறார். தாமரை பீடத்தில் நாற்கரங்களுடன் காட்சியளிக்கும் இவருடைய பின் கரங்கள் அட்சமாலை, கண்டிகை ஏந்துகிறது. புராயதகன் காலச் சிற்பங்களுக்கு எடுத்துளூ hட்டாக இவை விளங்குயீன்றன. இக் கோயிலில் 21 கல்வெட்டகள் உள்ளன.

முதலாம் பராந்தகனுடைய் கல்வெட்டில் இறைவன் சிறுத்திருக்கோயில் பெருமானடிகள் என்று அழைக்கப்பட்டுள்ளார். பெயருக்கு ஏற்ப நிறியக் கோயிலாகவே உள்ளது. கல்வெட்டில் இடம் பெறும் பரிவார ஆலயங்கள் காலவெளளூளத்தில் அழியது விட்டுள்ளன. முதலாம் பராயதகன், சுயதரசோழன், முதலாம் .இராஜராஜன், முதலாம் இராஜேயதிரன் ஆகிய சோழமன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. விசநல்துருவங்கி என்ற பெண் கோயிலில் விளக்கெரிக்க 8 கழஞ்சு பொன்னும் 20 கலம் நெல்லும் அளித்துள்ளாள். கவிசியன் நானூற்றுவன் பொன்னையும், நெல்லையும் பெற்றுக் கொண்டு தினம் உழக்கு நெய் விளக்கெரிக்க அளித்துள்ளார். உறுரூர் சபை சி கொடைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கொண்டு கட்டளைகளை நிறைவேற்றி வயதுள்ளது. ஆதித்தன் கண்ணர தேவர் வழங்கிய 90 ஆடுகளைக் கொண்டு சபை உழக்க நெய் வழங்கி கோயிலில் விளக்கேற்றி வயதுள்ளது. ஏழுமா நிலத்தை ஆதித்தன் கண்ணர தேவரிடம் பெற்று நாள்தோறும் திருவமுது படைக்க ஏற்பாடு செய்துள்ளது. கோயிலில் இசைக்கருவிகள்கொண்டு வாசிப்பவர்களுக்கு ஊதியம் வழங்க 5 கழஞ்சு பொன்னை அரையன் விச்சாதிரையன் முதலீடாகச் சபையில் அளித்தள்ளான்.

அமைவிடம் : சென்னையிலிருயது 190 கி.மீ தொலைவில் உள்ளது. சேத்தியா தோப்பு கூட்டு சாலையில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : சிதம்பரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 80/த.வ.ப.துறை/நாள்/29.03.96