கண்ணனூர்

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில், ஹொய்சாலா மன்னர்களின் தலைநகரமாகக் கண்ணனூர் திகழ்ந்திருந்தது. தற்பொழுது சமயபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

 

கண்ணனூருக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்ட பழைய கால்வாய் பகுதியைக் கண்டறியும் பொருட்டு, அகழாய்வு நடத்தப்பட்டது. அகழாய்வில் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், சீனப் பானை ஓடுகள், சுடுமண் மணிகள், கண்ணாடி வளையல்கள், அதிக அளவில் இரும்பு ஆணிகள் மற்றும் மத்திய காலத்தைச் சார்ந்த கூரை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

 

ஆய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதி மற்றும் கால்வாய்ப் பகுதி கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.