சிவன் கோயில் - அய்யாபட்டி (தர்காகுடி)

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரின் குளக்கரையில் ஒரு பிற்கால பாண்டியர் காலச் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இக்கோயில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினது எனத் துணியலாம்.

இக்கோயில் இறைவன் திருக்கோட்டீஸ்வரர் என்றும் ''ஊர் தாக்காய்குடி'' என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஒரு சிறு கருவறை, அர்த்தமண்டபத்துடன் இன்று காட்சியளிக்கும் இக்கோயில் தொடக்கத்தில் திருச்சுற்று மதிலுடன் கூடிய விரிவான கோயிலாக இருந்துள்ளது.

பராக்கிரம பாண்டியன், குலோசரபாண்டிய, வீரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் சுவர்களில் காணப்படுகின்றன.பல்லவராயன் சர்வ பொன்னம்பிள்ளை புலிவடைவேல் என்னம் அதிகாரி உருவன் கோயில் ஸ்ரீகாரியம் பணிபுரிவதற்காக வீரபாண்டியன் காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளான்.

தனிக்கல்லில் உள்ள இன்னொரு கல்வெட்டு கடகமாறுக்கிகள் என்னும் ஒரு குழுவினர் பால்கலசம் கொடையளித்ததைக் கூறுகிறது.

பிறக்கல்வெட்டுகளய் கோயிலுக்கான நிலக்கொடைகளைத் தெரிவிக்கின்றன. விநாயகர், முருகன், பைரவர், அம்மன் ஆகிய பிறசிறு தெய்வங்களுக்குச் சிற்றாலயங்களும் நந்திமண்டபமும் தொடக்கத்தில் கட்டப்பட்டிருந்தன. ததற்போது அவை பெரிதும் சிதைந்துள்ளன.

அமைவிடம் : சென்னையிலிருந்து 414 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருந்து  திருச்சிக்கு செல்லும் சாலையில் தற்காகுடி உள்ளது.

வட்டம் : மேலூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 114/த.வ.ப. துறை/நாள்/18.01.83