சேர அகழ்வைப்பகம் - கரூர்

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

:Thiru S.Selvakumar, Curator

தொலைபேசி

: ------------

 

இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் கரூர் வஞ்சி என்றும் கருவூர் என்றும் வழங்கப்படுகின்றது. சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை மற்றும் பதிற்றுப்பத்து ஆகியவற்றில் கரூர் மற்றும் சேர அரசர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. புகளூரில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டில் மூன்று சேர மன்னர்களின் வம்சத்தினைச் சேர்ந்த கோஆதன் சொல்லிரும்பொறை, அவனது மகன் பெருங்கடுங்கோ.

அவனது மகன் இளங்கடுங்கோ ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் ஆத்தாரைச் சேர்ந்த சமண முனிவரான செங்கயப்பன் என்பவருக்கு வழங்கப்பட்ட பள்ளி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு உள்ள புகளூரும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆத்தூரும், கரூருக்கு அருகில் உள்ள ஊர்களாகும்.

இத்துறை 1973, 1977-79 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் இங்கு அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல முக்கியத் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், ரோமானிய காசுகள், விலைமதிப்பற்ற கற்கள் ரௌலெட்டட் பானை ஓடுகள், ஆம்போரா துண்டுகள், கருப்பு சிவப்புப் பானை ஓடுகள், செங்கற்துண்டுகள் மற்றும் இரும்புத் துண்டுகள் ஆகிய தொல்பொருட்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

செங்கற்கட்டடத்தின் பகுதி ஒன்றும் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகழ்வைப்பகத்தில் கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி 19- ஆம் நூற்றாண்டு வரையிலான தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைத்த தங்கம், வெள்ளி ஆகியவற்றால் ஆன எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரங்களும், கி.மு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்திரையிடப்பட்ட காசுகளும் ஆகும்.

காட்சிப் பொருட்கள்:

மேற்பரப்பு ஆய்விலும், அகழாய்விலும் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நடுகற்கள், ரோமானியக் காசுகள், சங்ககாலச் சேர, சோழ, பாண்டியர் காசுகள், பல்லவர் காலக் காசுகள், பிற்காலப் பாண்டியர் காசுகள், முதலல் இராஜராஜன் காசு, நாயக்க மன்னர் காசு, ஓலைச்சுவடிகள், மணிகள், செப்புப் பட்டயங்கள், சுடுமண் மாதிரிகள் ஆகியவை பிற காட்சிப் பொருட்களாகும்.

அமராவதி ஆற்றினி கரையில், திருச்சியிலிருந்து 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கரூரில் 1982-ஆம் ஆண்டு, கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள தொல்லியல் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இவ்வகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது.

Google Map