தலைச்சங்காடு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைச்சங்காடு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் பண்டைய காலத்தில் பூம்புகாரின் ஒரு பகுதியாக விளங்கியது. இவ்விடத்தின் பாரம்பரியத்தை அறியும் நோக்கில் தமிழக பண்பாட்டினை தொல்லியல் துறையானது 2010 ஆம் ஆண்டு அகழாய்வு நடத்தியது.

இவ்வூர் அரசு நடுநிலைப் பள்ளியில் அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன

இரும்புக்காலம் முதல் இடைக்காலம் வரையிலான மூன்று பண்பாட்டு காலங்கள் அகழாய்வின் மூலம் வெளிப்பட்டன. சில்லுகள், சுடுமண் விளக்கு, செங்கற்கள், கெண்டிகள், கூரை ஓடுகள், அலங்காரம் செய்யப்பட்ட பானை ஓடுகள் மற்றும் சுடுமண் உறை கிணறு ஆகியவை இவ்வகழாய்வில் கண்டறியப்பட்டன.


பராந்தக சோழன் காலத்து கோயில் ஒன்றின் தடயங்கள் இவ்வகழாய்வில் வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுதை சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை இக்கோயில் அமைந்திருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.