திங்கட் சொற்பொழிவு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் திங்கட்  சொற்பொழிவு கூட்டத்தொடரில் தொல்லியல்,  கல்வெட்டியல், கட்டடக்கலை, சிற்பக்கலை, காசியல், தமிழ், வரலாறு என தொல்லியல் துறை சார்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறந்த வல்லுநர்கள் அழைக்கப்பட்டு அரிய கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.    இந்நிகழ்ச்சியில் அறிஞர் பெருமக்களும், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களும், உதவிப்பேராசிரியர்களும், பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும், மத்திய, மாநில தொல்லியல் துறையில் பணிபுரியும் ஆய்வாளர்களும், ஓய்வுபெற்ற வல்லுநர்களும், ஆர்வலர்களும் பார்வையாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.   இதன் மூலம் தமிழகத்தின் பண்டைய நாகரிகம், பண்பாடு போன்றவற்றின் பெருமைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

நாள்    -  பிரதி மாதம் மூன்றாம் அல்லது நான்காம் வாரம்

நேரம் -  மாலை 3.30 மணி அளவில்

இடம்  -  கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர்புரம், சென்னை.

தொடர்புக்கு – தொலைபேசி எண் 044 28190020  

மின்னஞ்சல் – archcommissioner@gmail.com