திருக்கோயிலூர்

திருக்கோயிலூர் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள இவ்வூர் சங்க காலத்துக் குறுநில மன்னனான மலையமானின் தலைநகரமாகத் திகழ்ந்துள்ளது.

 

அகழாய்வில் ஆம்போரா பானை ஓடுகள், சிவப்பு வண்ணப் பூச்சு பானை ஓடுகள், குறியீட்டு பானை ஓடுகள் மற்றும் கி.பி. 100-300 காலத்தைச் சார்ந்த பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

ஐம்பது சுடுமண் குழாய்கள் நீளவாக்கில் 9.5 மீ வரை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தது வெளிக் கொணரப்பட்டது. இக்குழாய் இணைப்பு அருகில் உள்ள ஆற்றிலிருந்தோ அல்லது ஒடையிலிருந்தோ குடிநீர் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.கண்டுபிடிப்பில், கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த பெண் உருவம் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணப் பானை ஓடு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.