திருத்தங்கல்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள திருத்தங்கல் என்ற ஊர் சிவகாசியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழ்க்காவியம் சிலப்பதிகாரத்தில் திருத்தங்கல், பண்டைய காலத்தில் ஒரு முக்கிய வாழ்விடமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரின் மேற்கோடியில் அகழாய்வுக் குழிகள் போடப்பட்டுத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குழியில் 65 செ.மீக்கு கீழ் நுண் கற்காலக் கருவிகளும், மூலக் கற்களும் சேகரிக்கப்பட்து. கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் மேல் மட்டத்திலிருந்து 65 செ.மீ வரை இருப்பது அறியப்பட்டது.
இவ்வகழாய்வின் கிண்ணங்கள், குறுகிய மற்றும் அகன்ற வாய் கொண்ட பானைகள், தட்டையான அடிப்பகுதி கொண்ட ஜாடி மற்றும் கிண்ணங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
ஸ்ரீவதஸக் குறியீடு கொண்ட களிமண்ணால் ஆன தொல்பொருகள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட இத்தொல்பொருட்கள் பெருங்கற்காலத்தைச் சார்ந்தவையாகும். (கி.மு 1000 முதல் கி.பி. 300 வரை)