படைவேடு

படைவேடு திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டத்தில் அமைந்துள்ளது. பண்டையக் காலத்தில் இவ்வூர் மருதராசர் படைவீடு என்று அழைக்கப்பட்டது. சம்புவராயர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த இப்பகுதியில் 1992-1993 ஆம் ஆண்டில் வேட்டைகிரிபாளையம் மற்றும் கோட்டைக்கரை மேட்டுப் பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டது.

 

இந்த ஆய்வில் கட்டடப்பகுதியின் குடிநீர்க் கால்வாய்கள் மற்றும் வட்டக் கிணறுகள் முதற்கால கட்டத்தைச் (கி.பி. 13-14 வது நூற்றாண்டு சார்ந்தவையாகும். இரண்டாம் கால கட்டத்தைச் சார்ந்த (கி.பி. 14-16 ஆம் நூற்றாண்டு) புகைப்பான்கள், சுல்தான் காசுகள், அலங்கரிக்கப்பட்ட சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் மற்றும் வளையல் துண்டுகள் ஆகியவை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.