பழையாறை

மத்திய காலச் சோழர்களின் இரண்டாம் தலைநகரமாகப் பழையாறை திகழ்ந்திருந்தது. இவ்வூர், கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. நந்தன்மேடு என்ற பகுதியில் பெருங்கற்காலத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

 

இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில், பெருங்கற்காலத்தைச் சார்ந்த கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகளும், மத்திய காலத்தைச் சார்ந்த சிவப்புப் பானை ஓடுகளும், கருப்பு வண்ணப் பானை ஓடுகளும், பீங்கான் ஓடுகளும், சங்கு வளையல்களும், கண்ணாடி வளையல்களும், சுடுமண் காதணிகள் மற்றும் சுடுமண் கெண்டி மூக்குகளும் கண்டெடுக்கப்பட்டன.