புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் -ஆண்டி மலை முழுவதும்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், சோழவாண்டிபுரம் கிராமம் ஆண்டி மலையில் அமைந்துள்ள சமணர் சிற்பங்கள், படுக்கைகள் மற்றும் 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகள் (ஆண்டி மலை முழுவதையும்) துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அரசாணை (நிலை) எண்.131, சுற்றுலா, பண்பாடு (ம) அறநிலையங்கள் (அதொ2) துறை, நாள் 19.05.2017-ன்படி அரசால் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.