மராட்டியர் அரண்மனை அகழ்வைப்பகம் - தஞ்சாவூர்

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

:Thiru T.Thangedurai, Curator- I/C

தொலைபேசி

: ------------

 

தஞ்சாவூர் அரண்மனை வளாகம், தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் விஜய ராகவ நாயக்க (கி.பி. 1633-1674) மன்னரால் கட்டப்பட்டது. இக்கோட்டை 530 ஏக்கர்ப பரப்பளவில் 15 அடி அகலமும் , 15 இடி ஆழழும் கொண்ட அகழி சூழ்ந்து காணப்படுகிறது. தஞ்சை நகரம் விரிவுபடுத்தப்பட்ட போது அகழி தூர்க்கப்பட்டு, சுவரும் இடிக்கப்பட்டது. இக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் இராஜகோபாலன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பீரங்கி காணப்படுகிறது. இத்துறை இவ்வரண்மனையின் பகுதிகளான ஆயுத கோபுரம், மணி மண்டபம் ஆகிய இடங்களைப் பாதுகாப்புச் சின்னமாக அறிவித்துப் பாதுகாத்து வருகின்றது.

தஞ்சை அரண்மனையின் கட்டடக்கலை, மராட்டியர் மற்றும் நாயக்கர் காலத்திய கலை, பண்பாட்டினைப் பிரதிபலிக்கின்றது. தர்பார் மண்டபத்தில் உள்ள ஓவியங்கள் இராமாயண, மகாபாரதக் காட்சிகளைச் சித்திரிப்பவையாகவும், சுவர்ப் பகுதிகளிலும் விதானத்திலும் உள்ள சுடுமண் உருவங்கள் கடவுளர்களின் உருவங்களைச் சித்தரிப்பவையாகவும் உள்ளன.

காட்சிப் பொருட்கள்:

கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்பள், இரும்புப் பொருட்களான கத்தி, குறுங்கத்தி மற்றும் சிறுகத்தி போன்றவையாகும். தஞ்சையின் மையப் பகுதியில் இயங்கும் இந்த அகழ்வைப்பகம் மராட்டா அகழ்வைப்பகம் என வழங்கப்படுகின்றது.