மருதுபாண்டியர் கோட்டை - அரண்மனை சிறுவயல்

வரலாற்றுச் செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. . சிறுவயல் என்பதே இவ்வூரின் பழமையான பெயராகும். பிற்காலத்தில் சிவகங்கை ஜமீன்தாரின் அரண்மனை ஒன்று இங்கு அமைந்ததால் அரண்மனை சிறுவயல் எனப் பெயர் பெற்றுள்ளது. 

பிற்காலப் பாண்டியர் காலத்திலேயே (கி.பி 13 ஆம் நூற்றாண்டு) இங்கு சிவன் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் இங்கு சிலகாலம் தங்கி போர் செய்திருக்கின்றனர். அவர்களது படைவீரர்கள் தங்கிய பகுதிகள் தற்போது வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அமைவிடம் : சென்னையிலிருந்து 431 கி.மீ தொலைவில் உள்ள சிவகங்கைலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : காரைக்குடி

 

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 28/த.வ.ப.துறை/நாள்/31.01.91