வணிகக் குழுக் கல்வெட்டுகள்

சங்க காலம் முதல் தமிழர் சமுதாயத்தில் வணிகம் ஒரு முக்கிய இடம் பெற்று வந்துள்ளது. ஆங்காங்கு வட்டார வணிகக் குழுக்கள் இருந்துள்ளன. தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் வெள்ளறை நிகமத்தோர் என்ற வணிகக் குழுவினர் குறிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு அமைப்புகளாகப் பரவலாக விளங்கியமை கல்வெட்டுகளில் அறியக் கிடைக்கின்றன. அக்குழுக்கள் தங்களுக்குள் கூடித் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றைக் கல்வெட்டு ஆவணங்களாகப் பொது இடங்களில் பலகைக் கற்களில் பொறித்து வைத்துள்ளனர்.

அய்யப் பொழில் ஐநூற்றுவர், திசை ஆயிரத்து ஐநூற்றுவர், நாநாதேசிகள், வளஞ்சியர், பதினென் விசயத்தார், மணிக்கிராமத்தார் ஆகிய வணிகக் குழுக்களின் கல்வெட்டுகள் இவ்வகையில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. சித்திரமேழிப் பெரிய நாட்டார் என்ற வணிகக்குழு கி.பி. 11 ஆம் நூற்றாண்டு முதல் அறியப்படுகிறது. இது விவசாயம் சார்ந்த வணிகக் குழுவாகும். இது தனக்கென்று தனி நியதிகளும், கூட்ட அமைப்புகளும் கொண்டிருந்தது. இவ்வணிகக் குழுக்கள் தங்களுக்கென்று தனி மெய்க்கீர்த்திகளைக் கொண்டிருந்தன.

இம்மெய்க்கீர்த்திகள் தமிழிலும் அமைந்திருந்தன. இவ்வணிகக் குழுக்களுக்கென்று தனிப் பாதுகாப்புப் படைகள் இருந்தன. கல்வெட்டுப் பலகைக் கற்களில் சூலம், பசும்பை, சங்கு, கலப்பைக் கொழு, சம்மட்டி, வாள், யானை, குதிரை, அன்னம், பத்ரகாளி, அய்யப்பொழில் பரமேசுவரி விளக்கு போன்ற உருவங்களைத் தொடக்கத்தில் புடைப்புச் சிற்பங்களாக அமைத்து அவற்றின் கீழ் கல்வெட்டு வாசகங்களைப் பொறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அய்யப் பொழில் பதினென் விசயம் கல்வெட்டு, சிங்களாந்தபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

நாநாதேசிக் குழுவின் கல்வெட்டுள்ள பலகைக் கல்லின் முன்புறமுள்ள உருவங்கள், ஈரோடு மாவட்டம். தற்பொழுது இது கோவை அகழ்வைப்பகத்தில் உள்ளது

ருத்ராபாளையம்

‘ஐஞ்நூற்றுவன் குளம்’ என்று எழுதப்பட்ட கல்வெட்டு, கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, பொழிச்சலூர், காஞ்சிபுரம் மாவட்டம்

முன்புறம் – பின்புறம் – நாட்டார் கல்வெட்டு, கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, திருப்புட்குழி, காஞ்சிபுரம் மாவட்டம்

முன்புறம் – பின்புறம் – நாட்டார் கல்வெட்டு, கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, திருப்புட்குழி, காஞ்சிபுரம் மாவட்டம்