அச்சகம்

Slide background
Slide background

கல்வெட்டு மற்றும் தொல்லியல் தொடர்பான நூல்களை வெளியிடுவதற்கென்றே, துறை அச்சகம் நிறுவப் பெற்றது . பெரும்பாலான துறை வெளியீடுகள் துறை அச்சகத்திலேயே அச்சிடப்படுகின்றன. இதுவரை 301 துறை வெளியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வெட்டு காலாண்டிதழ் இங்கு அச்சிடப்படுகின்றது. இதுவரை 104 கல்வெட்டு இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தக விற்பனை தொடர்பான விதிமுறைகள்

துறை வெளியீடுகள் முழுத் தொகையும் செலுத்திய பின்னர் தான் அனுப்பப்படும். நூல்களுக்கான தொகையினை வரைவோலையாகவோ அல்லது பணவிடை மூலமாகவோ உதவி கணக்கு அலுவலர், தொல்லியல் துறை, சென்னை - 600 008, தமிழ்நாடு, இந்தியா என்ற முகவரிக்கு அனுப்பிப் பெறலாம். அஞ்சலில் பெறுவதற்கு தனிக் கட்டணம் செலுத்துதல் வேண்டும். நூல்கள் சாதாரண/ பதிவு அஞ்சல் என விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அனுப்பப்படும்.

 

கல்வெட்டு காலாண்டிதழ் வெளியீடு ஒன்றின் விலை ரூபாய் 10/- ஆகும்.

மற்ற விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

தொடர்பு விபரங்கள் தொலைபேசி மின்னஞ்சல் தொலைநகல்

ஆணையர்
தொல்லியல் துறை
தமிழ் வளர்ச்சி வளாகம்
தமிழ்ச் சாலை
எழும்பூர்
சென்னை - 600 008

91-44 - 28190020tnarch@tn.nic.in 91-44 - 28190023