திருமலை நாயக்கர் அரண்மனை - மதுரை

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

:Thiru K.Sakthivel, Curator- I/C

தொலைபேசி

: 95-452-2338992

 

கி.பி. 1636-ஆம் ஆண்டு, மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (கி.பி. 1627-1659) என்ற மன்னரால் கட்டப்பட்டது. அழகிய மதச் சார்பற்ற இவ்வரண்மனைக் கட்டடம், இத்தாலிய நாட்டுக் கட்டடக்கலை, நிபுணரைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள இவ்வரண்மனைக் கட்டடப் பகுதி, முன்பி இதனை அளவில் நான்கு மடங்கு பெரிதாக இருந்துள்ளது. சொர்க்க விலாசம் மற்றும் இரங்கவிலாசம் என்ற இரு பகுதிகளைக் கொண்ட இவ்வரண்மனையில், அரசர்களின் வாழ்விடங்கள், திரையுரங்கம், அரண்மனைக் கோயில், இராணிகள் தங்குமிடம், ஆயுதங்கள் சேகரித்து வைக்குமிடம் ஆகியவை இருந்துள்ளன.

மேலும், உறவினர்கள், பணியாளர்கள் தங்குமிடங்கள், குளங்கள், தோட்டங்கள் ஆகியவையும் அமைந்திருக்கக்கூடும். ஏனெனில், பல எஞ்கிய கட்டடப் பகுதிகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இவ்வரண்மனைப் பகுதி முழுவதும் சுற்றுச் சுவரால் சூழப்பட்டிருக்கக் கூடும். கி.பி. 1980 ஆம் ஆண்டு இந்த அரண்மனை அகழ்வைப்பகம் தொடங்கப்பட்டது.

காட்சிப் பொருட்கள்:

மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சதுர வடிவச் செப்புக்காசு, விலை மதிப்பற்ற கற்கள், சங்கு வளையல் துண்டுகள், கோவலன்பொட்டலில் கிடைத்த எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சப்தமாதர் சிற்பத் தொகுதிகள், கொடுங்கை என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் பொம்மைகள் ஆகியவைகளாகும்.