ஆய்வாளர்களுக்கான சிறப்பு நூலகம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நாட்டிலேயே சிறந்ததொரு நூலகத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நூலகத்தில் ஏறத்தாழ 13,300 ஆய்வு நூல்கள் உள்ளன. இவற்றில் தொல்லியல், மானிடவியல், கலை, இலக்கியம், வரலாறு, கல்வெட்டு ஆகியன தொடர்பாக வெளிநாட்டு அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. மறுபதிப்பு மற்றும் சேகரிப்பில் உள்ள மிகப்பழமையான ஆய்வு நூல்களும், மஞ்சரிகளும் இதில் அடங்கும் உதாரணமாக Indian Antiquary 60 தொகுதிகளும், Asiatic Researches 24 தொகுதிகளும் இங்கு உள்ளன.
சமயஞ்சார்ந்த மறுபதிப்பு நூல்கள் 50 தொகுதிகளும் இதிகாசத்தொகுதிகள் 40-ம் இந்நூலகத்தில் உள்ளன. கலை, தொல்லியலில் நல்ல திறம் வாய்ந்த ஆய்வு நூல்களைக் கொண்டிருக்கும் நூலகங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்நூலகம் 1963-ஆம் ஆண்டு 300 நூல்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது ஏறத்தாழ 13,300 நூல்களும் பருவ இதழ்களும் உள்ள இந்நூலகம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் தலைப்புகளில் நூலகத்தில் உள்ள நூல்களை வகைப்படுத்தலாம்.
நூல் வகைகள்
- தொல்லியல்
- கல்வெட்டு
- நாணயவியல்
- வரலாறு பண்பாடு – நாகரிகம்
- சமயம் – தத்துவம்
- கலை – சிற்பம்
- மானிடவியல்
- தமிழ் இலக்கியம்
- திராவிடமொழி – சமஸ்கிருதம் – இந்தி – ஆங்கிலம் – பிரஞ்சு பிறமொழி களஞ்சியங்கள்
- கலைக் களஞ்சியம், அரசிதழ் ஆய்வறிக்கை
பயன்பெறுவோர்
- துறை அலுவலர்கள், வல்லுநர்கள்
- கல்வெட்டுப் பயிற்சி மாணவர்கள்
- பேராசிரியர்கள் ஆய்வாளர்கள்
- பொதுமக்கள் – தொல்லியல் ஆர்வலர்கள்
சேகரிப்புக்குரிய வழிகள்
- விலைக்குப் பெறுதல்
- நன்கொடை
- மாற்றுதல் அடிப்படையில்
நூலகத்திலுள்ள பருவ இதழ்கள்
- கல்வெட்டு (துறை வெளியீடு)
- ஆவணம்
- Archaeology
- Antiquity
- Indian Archaeology -A Review
- Ancient India
- Lalit Kala(No.1-22)
- Journal of Indian History (Vol. I - XXXIX)
- Journal of the Numismatic Society of India (I - VX)
- Numismatic Digest
- Bulletin of the Deccan College Research Institute (Vol. I - XXV)
- Institute of Archaeology Bulletin (1977-1987)
- Vishveshvaranand Indological Journal (I - XII)
- Tamil Culture (I - XX)
- International Journal of Dravidian Linguistics (I - XVII)
- Journal of Tamil Studies
- Journal of Asian Studies
பார்வை நேரம் |
: காலை10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை |
விடுமுறை நாட்கள் |
: சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் |
நூலகர் |
: திருமதி நா. உமா |
தொலைபேசி |
: 044-28190020 |