முனைவர் பட்ட ஆய்வு மையம்
முனைவர் பட்ட ஆய்வு மையம்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலின்படி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2003 ஆம் ஆண்டிலிருந்து அங்கீகாரம் பெற்ற முனைவர் பட்ட ஆய்வு மையமாக செயல்பட்டு வருகிறது.
இத்துறையில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கல்வெட்டியல், தொல்லியல், காசியல், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இலக்கியம் மற்றும் வரலாறு என அனைத்து துறைகளிலும் நல்ல அனுபவமும், ஆழ்ந்த அறிவும் கொண்டவர்களாய் விளங்குகின்றனர்.
மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இத்துறையில் மிகச்சிறப்பான நூலகம் ஒன்றும் உள்ளது. இந்நூலகத்தில் ஏறத்தாழ 13,300-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் உள்ளன. இவையனைத்தும் இத்துறையினரின் ஆராய்ச்சிப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆய்வுக்கு இன்றியமையாத கல்வெட்டுப்படிகளும், தொல்பொருட்களும் இத்துறையில் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இத்துறையின் தொழில்நுட்ப வல்லுநர்களுள் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வோர், தொல்லியல் துறைக்கு வந்து, துறையின் அலுவலர்களிடம் பலவகைகளிலும் ஆய்வுக்கு வழிகாட்டும் முக்கிய உதவிகளைப் பெற்று பயன்பெற்று வருவதோடு, துறை நூலகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொல்லியல் துறையை, சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்ட ஆய்வு நிறுவனமாக அங்கீகரித்தால், இந்நிறுவனத்தின் மூலம் மாணவர்கள் தொல்லியல் மற்றும் அதனைச் சார்ந்த பாடங்களில் ஆராய்ச்சிப் பட்டங்களைப் பெற ஏதுவாக இருக்கும் எனக் கருதி, தொல்லியல் துறையினைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நிறுவனமாகப் பதிவு செய்து கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சூடி.ஹஐஐ/ஹளுடீ-ஐஐ/னுஹ/ஞா.னு.சுநஉடிபn./2003, னயவநன 30.05.2003 என்ற ஆணையின்படி, 2003 ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் துறையானது சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுமையமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இவ்வாய்வு நிறுவனத்திற்கு மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட இத்துறை அலுவலர்களின் பெயர்கள் பின்வருமாறு.
வ.எண். | மேற்பார்வையாளர்களின் பெயர் |
1) | முனைவர். நா. மார்க்சிய காந்தி (ஓய்வு) |
2) | முனைவர். ஆ. பத்மாவதி (ஓய்வு) |
3) | முனைவர். சு. இராசகோபால் (ஓய்வு) |
4) | முனைவர். சீ. வசந்தி (ஓய்வு) |
இதுவரையில், இத்துறையின் மூலம் முனைவர் பட்டம் பெற்றவர்கள்
வ.எண். | பெயர்கள் |
1) | முனைவர் மு.ஆ.ப. சரஸ்வதி |
2) | முனைவர் த. ரமேஷ் |
3) | முனைவர் இரா. சிவானந்தம் |
4) | முனைவர் M. ராஜகோபாலன் |
5) | முனைவர் V. ஸ்ரீதர் |
6) | முனைவர் R. ஜெகதீசன் |
7) | முனைவர் ந.ப்ரீத்தா |
8) | முனைவர் கோ. சசிகலா |
9) | முனைவர் M.R. அருண சுந்தரி |
10) | முனைவர் B. மேகலா |
தற்போது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருபவர்கள்.
வ.எண். | பெயர்கள் |
1) | திரு. பொ. பாஸ்கர் |
2) | செல்வி தீபிகா |
3) | திரு. A. தமிழரசு |
4) | திரு. பெ. முருகன் |
5) | திரு. ஏ. ஜீவா |