ஆர்மாமலை - மலையம்பட்டு

வரலாற்றுச் செய்திகள்

ஆர்மாமலை என்று அழைக்கப்படும் இம்மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகையில் சமண முனிவர்கள் தங்குவதற்காக மண் மற்றும் பச்சை செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அறைகளும், வண்ண ஓவியங்களும் உள்ளன.

பாறையின் மேற்பகுதியில் அழகிய பல்லவர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆவ்வோவியத்தில் சமணச்சமயக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உரிய வாகணத்துடன் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டு இறுதி அல்லது 9-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வரையப்பட்டிருக்கலாம் கி.பி.1882-ல் ராபர்ட் சீவல் (சுழடிநசவளநறநடட) என்ற அறிஞர் ஆர்மாமலை ஓவியத்தைக் குறிப்பிட்டதுடன் மக்கள் ஓவியம் உள்ள குகையை பஞ்சபாண்டவர்களுடன் தொடர்புப் படுத்துவதையும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மண் சுவரில் ஆங்காங்கே தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் தெரிகின்றன. குகைத்தளத்தின் மேல் விதானத்தில் எண் சதுரம் வரைந்து, நடுவில் ஒரு சதுரம் அமைத்துத் தீட்டப்பட்ட ஓவியம் சிறப்பாக உள்ளது. இரண்டு சதுரங்களில் ஒன்றில் என்திசைக் காவலர்களும், மற்றொனடறில் தாமரைத்தடாகமும் தீட்டப்பட்டுள்ளன. எண்திசைக் காவலர்கனில் அக்னி தேவன் ஆட்டின் மீது அமர்ந்து வருவது போன்றக் காட்சியும், எருமை மீது எமன் வருவது போன்றக் காட்சியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மற்றொறு பகுதியில் சமவசரணத் தடாகம் ஒன்றும், தடாகத்தில் பூத்துக் குலுங்கும் தாமரைப்பூக்களுடன் இலைகளும், கொடிகளும் உள்ளன.

மறுபகுதியில் அன்னப்பறவைகளும் காணப்படுகின்றன. ஆhமாமலையிலுள்ள ஓவியங்கள் சித்தன்னவாசல் ஓவியங்களை ஒத்துள்ளன. இக்குகைத் தளத்தில் சமணப்பெரியார்கள் மண்ணால் கட்டடங்கள் கட்டி தங்குவதற்கும், வழிபாட்டிற்கும் வகை செய்துக் கொண்டிருந்தனர். இங்கு சில கற்சிலைகளும் கிடைத்துள்ளன. இச்சிலைகளின்கீழே கி.பி.8-ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்களில் ‘கடைக்கோட்டு ருத்த நந்தி படாரர் மாணாக்கர்’ என்று எழுதப்பட்டுள்ளது.இம்மலைக்கு ‘கடைக்கோடு’ என்ற பௌர் இருந்துள்ளது போலும். மேலும் இங்கு சமணக் கோயிலுக்குறிய மானஸ்தம்பத்தின் அடிப்பகுதி மட்டும் காணப்படுகிறது. ஆதில் ‘ஸ்ரீ கனக நந்தி படாரர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம் : சென்னையிலிருந்து - ஆம்பூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள மலையாமபட்டு கிராமத்தில் இருந்து 1.5 கி.மீ றீரத்தில் உள்ளது.

வட்டம் : குடியாத்தம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1109/கல்வி/நாள்/12.06.78