இரட்டை கோயில் - கீழையுர்

வரலாற்றுச் செய்திகள்:

இரட்டை கோயில் – கீழையூர் : இவ்விரட்டை கோயில் அவனிகயதர்ப்ப ஈஸ்வரர் கோயில் என்றும் அவனிகயதர்ப்ப ஈஸ்வரர் கிருகம் என்றும் அழைக்கப்படுகிறது. இருகோயில்கள் அடுத்தடுத்து ஒற்றை மதிலை அரணாகக் கொண்டு உள்ளன. இப்பெயர்கள் அங்குள்ள கல்வெட்டு வாயிலாக அறியப்படுகின்றன. தற்பொழுது இவ்விரட்டை கோயிலின் தென்வாயில் சிறுகோயில் அகஸ்தீஸ்வரர் கோயில் என்றும், வடவாயில் கோயில் அருணாசலேஸ்வரம் என்றும் அழைக்கப்பெருகின்றது.

இக்கோயிலின் கலைப்பாணி பல்லவர் காலக் கலைப்பாணியிலிருப்பது மாறுபட்டு சோழர் காலத்தின் கட்டடக் கலைப்பாணியை பிரதிபளிக்கிறது. அதாவது முதலாம் ஆதித்திய சோழன் காலத்தைச் சார்ந்தவையாகும். இக்கோயிலில் முதலாம் ஆதித்தனின் 13 - வது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது. மேற்கு நோக்கிய நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு துவாரபாலகர் சிலைகள் கி.பி 9 - ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.

மேலும், சூரியன், கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சிலைகள் தேவகோட்டங்களை அழகு செய்கின்றன. இக்கோயில் வடக்குப்பக்கத்தில் அருணாச்சலேஸ்வர கோயில் அமைந்துள்ளது. அதே காலகட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இக்கோயிலின் அர்த்தமண்டபத்திற்கு முன் இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள தேவகோட்டத்தில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர் கற்சிற்பங்கள் சோழர்காலச் சிற்பத்திறனை உணர்த்துகின்றன.

அமைவிடம் : சென்னையிலிருந்து சுமார்300கி.மீ தொலைவில் உள்ளது. அரியலூரில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது.

அமைவிடம் : சென்னையிலிருந்து சுமார்300கி.மீ தொலைவில் உள்ளது. அரியலூரில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : லால்குடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 269/த.வ.ப.துறை/நாள்/20.12.94