கரூர்

கரூர் திருச்சி நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சங்க காலச் சேரர்களின் தலைநகரமான கருவூர் வஞ்சி தான் கரூராக இருக்க வேண்டும் என்ற ஒரு சாராரும், மற்ற அறிஞர்கள் அது இல்லை என்ற அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

 

இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் பண்டைய காலத்தில் கரூர் ஒரு முக்கிய வாணிப மையமாக திகழ்ந்ததற்கான ஆதாரங்கள் வெளிக் கொணர்ந்துள்ளது. அகழாய்வில் செங்கற்களால் பாவப்பட்ட தரை பகுதியும் வடிகாலுடன் கூடிய அமைப்பு ஒன்றும் இருப்பது வெளிப்படுத்தப்பட்டது.

 

தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட (கி.பி. 100) பானை ஓடுகள், ரோமானிய ஆம்போரா, மத்திய தரைகடல் பகுதியைச் சார்ந்த ரௌலட்டட் பானை ஓடுகள் மற்றும் ரோமானியக் காசு ஆகியவை கண்டெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க தொல்பொருட்களாகும்.