தமிழ் பிராமிக் கல்வெட்டு - கொங்கறபுளியங்குளம்.

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூரின் வடபால் நாகமலைத் தொடர் நீண்டு செல்கிறது. இம்மலைத் தொடரின் ஒருபகுதியில் இயற்க்கையான நீண்டகுகை ஒன்று உள்ளது. இக்குகையில் சமணத்துறவியர் தங்கியிருயதமைக்குச் சான்றுகளாக முப்பதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் அமையதுள்ளன. இக்குகையின் நெற்றிப்பரப்பில் மூன்று இடங்களில் தமிழ் பராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இவை கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்யதவையாகும்.

  • குற கொடுபிதவன் உபசஅன் உபறுவ
  • குறுகொடல கு ஈத்தவன் செற்அதன் ஒன்
  • பாகன் ஊர் பேதாதன் பிடான் ஈத்தவேபொன்

இங்குள்ள குகைகளை செய்வித்தவர், கற்படுக்கை வெட்டக் கொடுத்தவர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. பாகன் ஊர் என்றும் ஊர்பெயரும் கூறப்பட்டுள்ளது.

இவ்வூர் இன்றைய சோழவந்தான் பகுதியில் இருந்த ஊராகும். அருகிலேயே பாறையின் ஒரு பகுதியில் தீர்த்தங்கரர் ஒருவரின் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இதனைச் செய்தவர் ஆச்சணயதி என்பவர் என்னும் செய்தி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் :மேலுர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 7/த.வ.ப. துறை/நாள்/06.01.90