பனையக்குளம்

பனையக்குளம் என்ற கிராமம் தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டிக்கும், பாலக்கோடுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாப்பாரப்பட்டியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பாப்பாரப்பட்டி-பனையக்குளம் சாலையில் அமைந்துள்ள மேட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில், சுடுமண் தொல்பொருட்கள், பானை ஓடுகள், செங்கற்கள், கி.பி. 800 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அழகிய சுடுமண் உருவத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

பனையக்குளம் பகுதியில் கி.பி. 300-1300 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்டுகின்றன.