ராஜாக்கள்மங்கலம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு 2009-10- ஆம் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது. ராஜாக்கள் மங்கலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் நம்பியாற்றின் வடகரைகயில் அகழாய்விற்கான குழிகள் அமைக்கப்பட்டன.

 

முற்கால பாண்டியரின் கட்டுமான கோயிலின் தடயங்கள் இவ்வகழாய்வில் வெளிப்பட்டது. கருங்கல்லான கோயில் அதிட்டானப் பகுதிகள், செங்கல் மற்றும் சுண்ணாம்பால் அமைந்த கட்டுமானப் பகுதிகள் அகழாய்வில் கிடைக்கப்பெற்றது. கருங்கல் சிலைகளும், சுதைச் சிற்பங்களும், கோயில் கட்டுமானப் பொருட்களுடன் கிடைத்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.