வந்தவாசி கோட்டை - வந்தவாசி

வரலாற்றுச் செய்திகள்

வந்தவாசி என்ற நகரம், ‘வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாகும். இந்தியாவில் ஆங்கிலேயர் காலூன்ற இங்கு நிகழ்ந்த போரே காரணமாகும். இவ்வூர் பேரூந்து நிலையத்திற்கருகே கோட்டையொன்று உள்ளது. இக்கோட்டை கி.பி 16-17 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்றிருக்கலாம்.

இக்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க பல போர்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறப்பானது கி.பி 1780-ல் நடந்த ரூன்றாவது கர்நாடகப் போர் நிகழ்ச்சி ஆகும். வுந்தவாசிப் போரில் பிரெஞ்சுப்படைகளும் ஆங்கிலப்படைகளும் மோதின.

பிரெஞ்சுப்படை லாலி என்பார் தலைமையிலும் ஆங்கிலப்படை சர் அயர் கூட் தலைமையிலும் எதிர்த்துப் போரிட்டன.

 

இப்போரில் ஆங்கிலேயர்கள் வெற்றிப்பெற்று பிரெஞ்சுக்காராகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த செய்தி இங்குள்ள மேடை மீது கல்எவட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வாசகம் வறுமாறு :

வந்தவாசி யுத்தம் 1760 ஆங்கிலத்தலைவர் சா அயர் கூட் பிரெஞ்சு தலைவர் லாலியை வென்றார் எனினும் பிற்காலத்தில் ஆற்காடு நவாப்களின் சொத்தாக இக்கோட்டை விளங்கி வந்தது.

புதிணெட்டாம் நூற்றாண்டில் பல போர்களைக் கண்டதால் கோட்டை சிதைந்தது. குயீ.பி 1780-ல் ஐதர் அலியின் படையை பிளின்ட் என்ற ஆங்கிலத் தளபதி தோற்கடித்தார்.

இக்கோட்டையைச் சுற்றிச் சுரங்கமும், அதிகாரிகள் தங்கும் கட்டிடமும், பீரங்கி ஒன்றும், கல்வெட்டு பதிக்கப்பட்ட மேடையும், ஆஞ்சநேயர் கோயிலும், அகழியும், இடுகாடும் அமைந்துள்ளன. இப்போரில் வெளளூளையர் தோற்று பிரெறுளூசுக்காரர்கள் வெற்றி பெற்றிருந்தால் தென்னிந்திய வரலாறே மாறியிருக்கும் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமைவிடம் : சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

வட்டம் : வந்தவாசி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1315/கல்வி துறை/நாள்/14.07.83