ஆங்கிலேயர் கல்லறை (44) - பாஞ்சாலங்குறிச்சி

வரலாற்றுச் செய்திகள்

பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையிலிருந்து சுமார் இரண்டு கல் தொலைவில், பரிசாலங்குறிச்சிப் போரில் இறந்துபட்ட ஆங்கில வீரர்களுடைய கல்லறை ஒன்று உள்ளது. இங்கு 45 வீரர்கள் அடக்கம் செய்யப் பெற்றுள்ளனர். இக்கல்லறைகளைச் சுற்றி சுற்றுச்சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு ரூன்று விதமான கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உயரதிகாரிகளுக்கு உயரமான மேடையும், சறு அதிகாரிகளுக்கு உயரம் அளவு குறைந்த மேடையும், படைவீரர்களுக்கு மேடையின்றி கல்லறைகள் மட்டம் அமைக்கப்பட்டுள்ளன.

உயர் அதிகாரிகளின் கல்லறைகள் படி வடிவ அமைப்பிலும், மற்ற கல்லறைகள் வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. உயரதிகாரிகளின் கல்லறை மேடையில் மட்டும் இரு கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டுகளில் ஒன்று சண்டையில் இறந்த கேபடன் மற்றும் லெப்டினென்ட்ஆகியோருடைய பெயரையும் மற்றொன்று இளம் அதிகாரியின் தீரத்தையும் விளக்கிச் சொல்கிறது.

1801-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதியிலும் அதே ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதியிலும் இறந்தவர்களுடைய கல்லறை என்பது, கல்வெட்டிலிருந்து தெரிகிறது.இதிலிருந்து கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிறகு, மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியைத் தலை நகராக்கி வீரப்போர் புரிந்த ஊமைத்துரையுடன் நடந்த போரில் இறந்துபட்ட வீரர்களின் கல்லறை இது என்பது தெளிவாகும்.

அமைவிடம் : சென்னையிலிருந்து --- கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருந்து --- கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : ஒட்டப்பிடாரம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 65/த.வ.ப.துறை/நாள்/13.03.87