இராமலிங்க விலாசம் அரண்மனை - இராமநாதபுரம்

Get Direction / Information

வேலை நேரம்

: 10.00 a.m to 5.00 p.m.

விடுமுறை

: வெள்ளிக் கிழமை

அதிகாரி

: Thiru B.Asaithambi, Curator- I/C

தொலைபேசி

: ------------

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் இராமநாதபுரம் அமைந்துள்ளது. இராமலிங்க விலாசம் எனப்படும் சேதுபதி மன்னர்களின் இராமநாதபுர அரண்மனையில் இத்தொல்லியல் அகழ்வைப்பகம் இயங்கி வருகின்றது.

காட்சிப் பொருட்கள் :

இரும்பினால் ஆன வேல், கத்தி, குறுவாள், துப்பாக்கி மற்றும் வளரி போன்ற போர்க்கருவிகளும், அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், போர்க்காட்சிகள், கடவுளரின் உருவங்கள், இராமாயணம், பாகவதம் ஆகிய புராணக் காட்சிகள், இராமரின் பிறப்புக் குறித்த பாலகாண்ட காட்சிகள், நீர் விளையாட்டுகள் போன்றவை சுவர்களிலும், அரண்மனை விதானத்திலும் தீட்டப்பட்டுள்ளன. அக்கால நடைமுறையில் இருந்த சொல்நடையில் இக்காட்சிகள் பற்றிய குறிப்புகள், அவற்றின் கீழே காணப்படுகின்றன. இவை தொல்லியல் சிறப்பு மிக்க ஓவியங்களாகும்.