சிவன்கோயில் – சிவபுரம்

HISTORICAL BACKGROUNDS :

சிவபுரம் என வழங்கப்படும் இவ்வூர் புழங்காலத்தில்ளூ ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர் வேளுர் நாட்டு உரோகடம் என அழைக்கப்பட்டது. முதலாம் இராசாதிராசனின் 27 ஆம் ஆட்சியாண்டில் இவ்வூர் சிவபுரம் என பெயர் மாற்றி அழைக்கப்பட்டது. பின்னர் உரோகடம் மறையது சிவபுரம் என்ற பெயர் நிலைத்து விட்டது. இங்குள்ள சோழர் காலத்திய சிவன் கோயில், மஹாதேவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. முழுவதும் கருங்கல்லாலும்., ஒருதள விமானத்துடனும் ஆன இவ்வூர் கோயிலை ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயில் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.இக்கோயிலில் உள்ள கருவறை, இடைநாழி, மஹாமண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகிய அணைத்து பகுதியும் இராசராசன் காலத்துக் கட்டடக் கலைப் பாணியிலும், தேவகோட்டங்கiளில் விநாயகர், தட்சிணாரூர்த்தி, இலிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகிய சிலைகள் அலங்கரிக்கின்றன. முதலாம் இராசேயதிரனின் 8-ஆம்

ஆட்சியாணடின் கல்வெட்டே இக்கோயிலின் பழமையான கல்வெட்டாகும். இவனது 26 ஆம் ஆட்சியாண்டின் கல்வெட்டுகள் இவ்வூர் கோயிலின் பல்வேறு பணிகள் தடையின்றி நடைபெற நீர் வேளுர் நாட்டு ஊரார் சபையாரிடை பொன்னைத் தயது அதன் வட்டியை பெற வகை செய்யப்பட்டு இருயததைக் குறிப்பிடுகின்றன. இராசாதிராசனுடைய 27 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலில் பணி செய்த பல அலுவலர்களைக் குறிப்பிடுகிறது.

அமைவிடம் : சென்னை - அரக்கோனம் சாலையில் சென்னையிலிருயது ---- கி.மீ தொலைவில் உள்ள பேரமபாக்கத்தில் இருயது 3 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : திருபெரும்புதூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1109/கல்வி/நாள்/17.06.78