திருவாதவூர் கல்வெட்டு
வரலாற்றுச் செய்திகள்
திருவாதவூர் சைவசமயக் குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊராகும். இவ்வூரின் மேற்கே குன்றின் மேல் இயற்கையான குகை ஒன்று உள்ளது. அதில் சமணர்களுக்கான கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. குகையின் நெற்றிப்பரப்பில் கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக்கல்வெட்டுகள் இரண்டு வெட்டப்பட்டுள்ளன.
- 1. பங்காட அர்அதன் கெர்ட்டுபிதோன்
- 2. ஊபாசன் பர்அசூ ஊறை கொட்டுபிதோன்
அக்கல்வெட்டுகளின் வாசகங்கள். பங்காட்டைச் சேர்ந்த அரிதன் என்பான் மற்றும் உபாசகன் ஆகிய பரசு என்பவர்கள் உறைவதற்கு இடம் செதுக்கிக் கொடுத்ததை குறிக்கிறது. இக்குகையையும், கற்படுக்கைகளையயும் வெட்டிக் கொடுத்தவர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஊபாசன் என்னும் சொல் இல்வாழ்வில் ஈடுபட்டுள்ள சமணரைக்குறிப்பதாகும்.
கோட்டுபிதோன் என்னும் சொல் கொடுத்தவன் என்ற பொருளில் வரும். ஊபாசன், பரசு என்பவை இவ்வூருக்கு அருகில் இன்று பனங்காடி என்று அழைக்கப்படும் கிராமத்தின் பழம் பெயராக இருக்கலாம்.
அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருந்து 29 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : மேலூர்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண். 7/த.வ.ப.துறை/நாள்/06.01.90