மகாதேவர் கோயில், இடையார்பாக்கம்

வரலாற்றுச் செய்திகள்

"இடையார்பாக்கம்'' பல்லவர் - சோழர் காலத்திய வரலாற்றுத் தொடர்புடைய ஊராகும்.  தொண்டை மண்டலத்திற்கே சிறப்பானதொரு கட்டட அமைப்பான தூங்கானைமாட வடிவத்துடன் அமைந்துள்ள இக்கோயிலில் முதல் குலோதுங்கன் காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகளும் இரண்டாம் இராசராசன் காலக் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் முதல் குலோதுங்கன் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டுமெனக் கல்வெட்டுகளாலும், கட்டடக்கலை பாணியாலும் அறிய முடிகிறது. இக்கோயில் சந்திரசேகரன் ரவி என்ற சோழேந்திர சிம்ம ஆசாரி என்ற சிற்பியினால் கட்டப்பட்டது என்ற செய்தியை கல்வெட்டால் அறிகிறோம். இறைவன் திருப்பாத காடுடையார் என அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் இவ்வூர் இடையாற்றுப்பாக்கம் எனவும் ராஜ வித்யாதர சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்படுகிறது.

 

இவ்வூர் ஜெயங்கொணட சோழமண்டலத்தில் மணவிற் கோட்டத்து புரிசை நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இது கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் கூடிய இக்கோயில் விமானம் இருதள அமைப்புடையது.

கருவரையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வச் சிலைகள் சோழர் கால கலைப்பாணியில் காட்சி தருகின்றன

 

அமைவிடம் : சென்னை - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்னையிலிருயது 50 கி.மீ தொலைவில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து திருவள்ளூர் சாலையில் 28 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : திருபெரும்புதூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 352/த.வ.ப.துறை/நாள்/23.10.87