உதயகிரிக் கோட்டை
வரலாற்றுச் செய்திகள்:
உதயகிரிக் கோட்டைச் சுவர் முதலில் மண்கோட்டைச் சுவராக கி.பி 1600-ல் வேணாட்டரசர் ஸ்ரீவீரரவிவர்மா காலத்தில் (கி.பி 1596-1607) எழுப்பப்பட்டது. இக்கோட்டைச்சுவர் எழுப்புவதற்கு மங்கலம்முதல் மணக்குடி வரையிலுள்ள நரிசில் நாட்டார் பணம் கொடை வழங்கியது இம்மன்னின் நீட்டோலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கோட்டைச்சுவர் எழுப்புவதற்கும், அகழி வெட்டுவதற்கும், ஓலையினால மேற்கூரை மேய்வதற்கும் இக்கொடை வழங்குவதாக நீட்டோலை தெரிவிக்கின்றது. டிலேனாயின் மேற்பார்வையில் உதயகிரிக் கோட்டையின் மண்கோட்டைச்சுவர் கற்கோட்டைச்சுவராக மாற்றி கி.பி 1744-ல் கட்டி முடிக்கப்பட்டத.
உதயகிரிக் கோட்டை 260 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மீது சுமார் 85 ஏக்கர் பரப்பினை உள்ளடக்கிய பகுதியினைச் சுற்றி கருங்கல்லினால் எழுப்பப்பட்டுள்ளத. கோட்டைச் சுவரின் உயரம்
சராசரியாக 18 அடி உயரத்திலும் 15 அடி கனத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி 10 கொத்தளங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுள் 5 மட்டுமே பீரங்கி நிறுத்துவதற்கான கொத்தளங்களாக அமைந்துள்ளன. ஏனைய 5 கொத்தளங்கள் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவலுக்கு நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
புயீரதான நுழைவு வாயில் மேல்பறத்தில் அமைந்துள்ளது. இது தவிர கோட்டையின் தென்புறத்தில் ரூன்று சிறிய நுழைவு வழிகளும், வடப்புரத்தில் ஒரு நுழைவு வழியும்கட்டப்பட்டள்ளன. ஆனால், தற்போது தென்புறத்து நுழைவு வழிகள் காணப்படவில்லை. கோட்டைச் சுவரின் கற்கள் கருப்புக்கட்டி, சுண்ணாம்பு போன்ற கலவைப் பொருட்கள் கொண்ட பிரத்யேகக் கலவையினால் இணைக்கப்பட்டுள்ளன. கோட்டைச் சுவரின் பெரும்பகுதி சிதைந்து விட்ட நிலையில் இதன் எச்சங்கள் மட்டும் ஆங்காங்கே காணப்படுகிறது.
ஊதயகிரிக் கோட்டை டிலெனாய் மேற்பார்வையில் பீரங்கிக் குண்டுகள், போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்கூடமாகவும், சேமிப்புக் கிடங்காகவும் இருந்துள்ளது. திருவிதாங்கூர் பேரரசு உருவாக்கத்தின் பன்னணியில் உதயகிரிக்கோட்டை டிலெனாய் மேற்பார்வையில் ஒரு முக்கிய இராணுவ கேந்திரமாக செயல்பட்டது.
புயீற்காலத்தில் உதயகிரிக்கோட்டை ஒரு சிறைக்கூடமாகவும் பயன்பட்டுள்ளது. திப்பு சுல்தானின் படைவீரர்களில் சிறைபிடிக்கப்பட்ட சிலர் இக்கோட்டை வளாகத்தில் சிறிது காலம் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
டச்சுக் கல்லறைகள்
டிலெனாயி, மார்த்தாண்டவர்மா காலத்திலும், அவருக்கு பின்பு கார்த்திகைத் திருநாள் இராமவர்மா (1758-1798) காலத்திலும் திருவிதாங்கூர், படைத்தளபதியாக பணியாற்றி கி.பி 1777-ல் இயற்கை எய்தினார். இக்கோட்டை வளாகத்திலேயே ராமவர்மா காலத்தில் இவருக்கு கல்லறை எழுப்பப்பட்டு அதில் இலத்தீன் மற்றும் தமிழில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.
குல்வெட்டில் டிலெனாயி வலிய கப்பித்தான் (புசநயவ ஊயிவயin) எனக் குறிப்பிடப்படுகிறார். இக்கல்லறையில் டச்சு அரசு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. டீலெனாயின் மகன், யுவான் டிலெனாயி, மனைவி மரிகாத டிலெனாயி மற்றும் டிலெனாயுடன் பணிபுரிந்த இராணுவ அதிகாரி பீட்டர் புலோரி ஆகியோருக்காக மொத்தம் 4 கல்லறைகள் அருகருகே இக்கோட்டை வளாகத்திலேயேகட்டப்பட்டு அவற்றில் இலத்தீன், தமிழ் ஆகிய மொழிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளன.
இக்கல்லறைகள் அணைத்தும் கார்த்திகைத் திருநாள் இராமவர்மா (தர்மராஜா) (கி.பி 1758-1798) காலத்தில் எழுப்பப்பட்டவையாகும். டீலெனாயிக்கு முன்பாகவே அவரது மகன் யுவான் டிலெனாயி யூசுப்காணுக்கு எதிரான களக்காட்டுப்போரின் போது கி.பி 1764-ல் இயற்கை எய்தினார். குல்வெட்டில் இவர் ‘வலிய கப்பித்தான் மகன் செறிய கப்பித்தான்’ (ளுஅயடட ஊயிவயin) என குறிக்கப்படுகிறார்.
“களக்காட்டுச் சண்டையிலே காயப்பட்டு…. சரிரம் விழுந்து போகவும்…. என்ற குறிப்பு இவனது கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
கி.பி 1782-ல் பொறிக்கப்பட்ட டிலெனாயின் மனைவி மரிகாத டிலெனாயின் கல்லறைக் கல்வெட்டில் அவர் ‘எளியவர்களுடைய தாயார்’ என குறிப்பிடுகிறது.
ஆங்கிலேயரின் கல்லறை மேலே குறிப்பிட்டுள்ள 4 டச்சுக் கல்லறைகள் தவிர்த்து ரூன்று ஆங்கிலேயரின் கல்லறைகளும் இப்பகுதியலேயே காணப்படுகின்றன. இவற்றுள் ஒன்று பாலராமவர்மா (கி.பி 1798-1811) காலத்தில் கும்பினிய இராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்து கி.பி 1802-ல் இயற்கை எய்திய ஜேர் பீட்டர் சார்லஸ் என்பாரின் கல்லறையாகும். மற்றொன்று ராணி கௌரி லட்சுமி பாய் காலத்தில் (கி.பி 1810-1815) திருவிதாங்கூர் படையில் கும்பினியக் கேப்டனாகப் பணிபுரிந்த கேப்டன் ஏ.ஆர். ஹியூஸ் என்பாரின் குழந்தைகள் கு.பி 1812 மற்றும் 1813 ஆகிய ஆண்டுகளில் இயற்கை எய்தியதற்காக எழுப்பப்பட்ட ஒரே கல்லறையாகும். இறுதியாக ராணி கௌரி லட்சுமிபாய் காலத்தில் பணிபுரிந்த கும்பினியார் டபிளயு.ஆர். ரௌஸ்காண்டர் என்பாரின் மனைவி தீருமதி. அன்னிரௌஸ் கி.பி 1811-ல் இயற்கை எய்தியதற்காக எழுப்பப்பட்டதாகும். இக்கல்லறைக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்லறைகளுக்கு அருகிலேயே டிலெனாயி வழிபாடு செய்த கிருஸ்தவ ஆலயம் மேற்கூரையில்லாமல் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
அமைவிடம் : சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 125 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.
வட்டம் : கல்குளம்
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 226/த.வ.ப.துறை/நாள்/04.09.97